சைவ வகைகள்

புதினா  பக்கோடா

செய்முறை : புதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய

தவநிதி

தேவையானவை :

கடலை மாவு - அரை கிண்ணம்

அரிசி மாவு - கால் கிண்ணம்

உடைத்த முந்திரி - 10

புதினா  - 1 கப்

நறுக்கிய வெங்காயம் - அரை கிண்ணம்

பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி - பூண்டு அரைத்த விழுது - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : புதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய வெங்காயம், உடைத்த முந்திரி, பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து  புதினாவும் சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து புரட்டினாற்போன்று பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து மாவை உதிர்த்து பகோடாக்களாக  போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான புதினா  பக்கோடா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT